வெள்ளி, 21 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 14

 

அத்தியாயம் : 14

ஒருபக்கம் பவன் பற்றிய பதட்டமும், மற்றொரு புறம் சித்தார்த்தனின் கடுமையான வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாது, நரகத்தில் இருப்பது போல மனதிற்குள் துடித்து கொண்டிருந்தாள் லஷ்மீகா.

"வீட்ல பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிட்டிங்களா?" எனக் கேட்டான் சித்தார்த்தன்

"இ… இல்ல சார். அவங்க இப்ப வொர்க்ல இருப்பாங்க. நான் தான் பவனை பார்த்துக்குவேன்" என்றாள்.

"நல்லா பார்த்திங்க? அடிக்கடி வெளிய வருவிங்களா?" என்று சடைத்தபடி கேட்டான்.

"எ… எஸ் சார். ப்ரெண்ட்ஸோட தான்" என்று பேச்சு வராது தவித்தாள்.

"எடுத்த உடனே பையனை தூக்க மாட்டான்க. குறைஞ்சது  ஒரு மாசமாவது உங்களை ப்லோ பண்ணிருப்பான்க. நீங்க அதிகமா வெளில நடுமாடுறதால பையனை தூக்க அவன்களுக்கு வசதியா போயிடுச்சு. 

இனிதான் நீங்க ரொம்ப ஹேர்புல்லா இருக்கனும். இப்ப பையனை கண்டிப்பா நாம காப்பாத்திடலாம். ஸோ… பணம் கிடைக்காத கோபத்துல தான் அடுத்து பையனை தூக்க நினைப்பான்க. ரொம்ப பெரிய நெட்வொர்க்கா செயல்படுறான்க.  பீ ஹேர்புல்.

நெக்ஸ்ட் டைம் பவனை தூக்கினா உயிரோட கூட விட மாட்டான்க. ஸோ அவன் படிக்கிற ஸ்கூல்லையும் அவனை பத்தி இன்பார்ம் பண்ணுங்க. குறைஞ்சது ஒரு வருஷம்ன்னாலும் பவனை ப்லோ பண்ணுவான்க. சான்ஸ் கிடைச்சா தூக்கிடுவான்க. அவனை எங்கேயும் வெளிய அனுப்பாதீங்க" என்று அறிவுரை வழங்கினான்.

பவனுக்கு எப்பொழுதும் ஆபத்தா? என்று மனதிற்குள் பயந்தவள், 'பவன்!!! சீக்கிரம் உன்னைப் பார்க்கனும்டா. உன்னை இனிமேல மிஸ் பண்ண மாட்டேன். ஹேர்புல்லா பார்த்துக்குவேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் லஷ்மீகா. 

வாகனத்தைச் செலுத்திய படி, நாலாபுறமும் பார்த்துக் கொண்டே இருந்தவன், திடீரென்று வண்டியை நிறுத்தினான் சித்தார்த்தன்.

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று, பாதி ஆட்டோவை மறைத்தபடி கல்யாண போஸ்டர் ஒன்றால் போர்த்தியபடி இருந்தது. அதனை சந்தேகத்துடன் பார்த்தபடி வாகனத்திலிருந்து இறங்கி, ஆட்டோவின் அருகில் சென்றான்.

அவன் பின்னால் ஐஸ்வர்யாவும், லஷ்மீகாவும் சென்றார்கள்.

ஆட்டோ மேல் போற்றியிருந்தவற்றை தகர்த்தியவன் ஆட்டோவினுள் இருந்து சாக்லெட் ஒன்றை எடுத்தான்.

அதனைப் பார்த்ததும், "சார், இந்த சாக்லேட்ட பவன் கையில வச்சிருந்தான். இது... இது அன்னைக்கு நாங்க வந்த ஆட்டோ தான். ஆனா… பவனை காணோமே சார்" என்று துக்கம் தாளாமல் ஐஸ்வர்யாவின் தோளில் சாய்ந்து அழுதாள் லஷ்மீகா.

"இது வெயில் காலம் ஏன் ஆட்டோவை போத்தி வச்சிருக்காங்கனு ஆட்டோவை பார்த்ததும் டவுட் வந்தது. அப்போ... பவன் இங்க பக்கத்துல தான் இருக்கணும். நீங்க ஜூப்ல வெயிட் பண்ணுங்க. நான் வந்திடுறேன். யாராவது சந்தேகப்படுற மாதிரி, உங்களை க்ராஸ் பண்ணி நடந்தாலோ கார்லையோ பைக்லையோ போனா, உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. என் நம்பர் அப்ப சொன்னேன்ல அது தான்" எனக் கூறிவிட்டு நகர முயன்றான்.

"சா… சார் நாங்களும் உங்க கூட வர்றோம் சார்" எனக் கேட்டாள்.

"டூ வாட் ஐ சே" என்று கண்கள் இடுங்கக் கூறிவிட்டு வேகமாக ஓடினான் சித்தார்த்தன்.

இருவரும்  வாகனத்தினுள் வந்தமர்ந்தார்கள்.

சில நொடி கடந்தது.

மனம் முழுக்க பதட்டத்துடன் அந்த சாலையில் யார் போகிறார்கள்? யார் வருகிறார்கள் என்று இருவரும் கூர்ந்து கவனித்தார்கள்.

அச்சமயம் லஷ்மீகாவின் போன் ஒலி எழுப்பியது.

பதட்டத்துடன் செல்போனை பார்த்தாள். திரையில் தீவிதா எனக் காட்டவும், அழைப்பை ஏற்றாள்.

"லஷ்மீ பவன் கிடைச்சிட்டனா?"

"இன்னும் இல்லடி. ஆனா... அந்த ஆட்டோகாரனோட ஆட்டோவை கண்டுப்பிடிச்சாச்சு. பவனை தேடித் தான் சார் போயிருக்காங்க"

"ஓகே!!! எந்த இடம்ன்னு சொல்லு, நாங்களும் வர்றோம்" எனக் கேட்டாள்.

இடத்தை பற்றி கூறினாள் லஷ்மீகா. அதனைக் கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்தாள் தீவிதா.

மேலும் அரை மணி நேரமானது. சித்தார்த்தனை காணவில்லை. தோழிகளும் வரவில்லை.

பதட்டத்துடன் இருந்த லஷ்மீகாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தாள் ஐஸ்வர்யா.

லஷ்மீகாவோ… சீக்கிரம் பவன் கிடைக்க வேண்டும் என்று  மனதிற்குள் விநாயகரிடம் வேண்டுதல் செய்துக் கொண்டே இருந்தாள்.

கிட்டத்தட்ட அவர்கள் வாகனத்தினுள் அமர்ந்து, ஒரு மணி நேரமானது. யாரும் வரவில்லை.

இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சித்தார்த்தனுக்கு அழைத்தால் திட்டுவானோ என்ற பயத்துடன் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

தூரத்தில் பவனை தோளில் சுமந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தான் சித்தார்த்தன்.

அவனை ஐஸ்வர்யா பார்த்துவிட்டு சந்தோஷமாக லஷ்மீகாவிடம் தெரிவித்தாள்.

அவ்விருவரையும் சாலையில் பார்த்த நொடி ஆனந்த அதிர்ச்சி அடைந்த லஷ்மீகா, வேகமாக வாகனத்தினுள் இருந்து இறங்கி அவர்களை நோக்கி ஓடினாள். சித்தார்த்தனின் அருகில் சென்று பவனை வாங்கினாள்.

அவனோ, 'அக்கா' என்ற அழைப்போடு லஷ்மீகாவை இறுக்கமாக தழுவினான்.

"ஏன்டா இப்படி பண்ண?" என்று கண்கள் கலங்க கேட்டுவிட்டு, அவனது முதுகைத் தடவிக் கொடுத்து, அவனது கன்னத்தில், நெற்றியில், தலையில் என்று முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள் லஷ்மீகா.

அவளைத் தடுத்து அவளது இரு கன்னத்தையும்  தன் குட்டி கைகளால் தாங்கி, "சாரீ... இனிமே உன்னை விட்டுப் போகமாட்டேன். உன் மேல ப்ராமிஸ் டாங்கி" எனக் கூறிவிட்டு லஷ்மீகாவின் கன்னத்தில், நெற்றியில் முத்தம் கொடுத்தான் பவன்.

அவர்களின் பாசப் போராட்டத்தை கைகட்டி நின்று பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். அவனது முகத்திலும் கடுமை மறைந்து, இனிமை கூடி வந்தது. அதனை லஷ்மீகா கவனித்தாள்.

"எனக்கு மம்மியை பிடிக்காது. உன்னைத்தான் பிடிக்கும். ஏன்னா... நீ தான் எனக்கு மம்மி" என்று அழுக ஆரம்பித்தவன், மறுபடியும் லஷ்மீகாவை பயத்துடன் கட்டிக் கொண்டான் பவன்.

"எனக்கும் உன்னைத் தான்டா நம்ம வீட்லையே பிடிக்கும். நீ... நீ... தான் என் பர்ஸ்ட் பேபி" என்றாள் கரகரத்த குரலில் லஷ்மீகா.

அச்சமயம் விஷாலாக்க்ஷாவுடன்  அவர்களது அருகில் வந்தார்கள் தோழிகள்.

"பவன்... ஏன்டா இப்படி பண்ணின?" எனக் கேட்டுவிட்டு, ஆளுக்காளு அவனைத் தூக்கி முத்தம் கொடுத்தார்கள்.

அவனோ... அவர்களிடமிருந்து லஷ்மீகாவிடம் தாவினான். அவனை தோளில் போட்டுக் கொண்டாள் லஷ்மீகா. அவளது கழுத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் பவன்.

அவனின் சைகையை கவனித்து கொண்டிருந்த சித்தார்த்தன், "பையன் கொஞ்சம் பயந்திருக்கான் போல. எதுக்கும் டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போங்க. நாளைக்கு ஆபிஸ்க்கு வந்து கம்பெளண்ட் கொடுங்க" என்றான்.

"க… கம்ப்ளேண்ட் கண்டிப்பா கொடுக்கனுமா சார்?" என்று தயங்கியவாறு கேட்டாள் லஷ்மீகா.

"ஏன் கொடுத்த என்ன?" என்று தனது வலது பக்க புருவத்தை உயர்த்தியபடி கேள்வியாய் அவளைப் பார்த்தான்.

அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாது, "பவன் தான் கிடைச்சிட்டானே அதான் கம்பெளண்ட் கொடுக்கனுமானு கேட்டேன்" என்று பேச்சை மாற்றினாள்.

"உங்க பேரண்ட்ஸோட வந்து கண்டிப்பா கம்பெளண்ட் கொடுக்கனும். வரும் போது பவனையும் அழைச்சிட்டு வாங்க. அவன் கிட்ட விசாரிக்கணும். அண்ட் இனி எதிலும் ரொம்ப ஹேர்புல்லா இருங்க. கழுகு போலக் காத்திட்டு இருப்பான்க. நீங்க மீன் போலத் திரும்ப அவங்க வலையில சிக்கிடாதீங்க" என்று எச்சரித்தான்.

சரி என்பது போல தலையாட்டினாள் லஷ்மீகா.

"விஷா... அங்க ஒரு குடோன் இருக்கு அங்க தான் ஆட்டோக்காரனை   கட்டிப்போட்டிருக்கேன். கான்ஸ்டபிள்ளை விட்டு  அவனை ஆபிஸ்க்கு அழைச்சிட்டு வர சொல்லு. இவங்களை வீட்ல ட்ராப் பண்ணிடு. எனக்கு இன்னொரு கேஸ் இருக்கு" எனக் கூறிவிட்டு ஜீப்பில் விரைந்தான் சித்தார்த்தன்.

கான்ஸ்டபிள்ளை அழைத்து கொண்டு விஷாலாக்க்ஷா நகரவும்,

"என்னடி? உன் ஆளு இவ்வளவு ரஃப் அண்ட் டஃபா இருக்கான்" என்றாள் தீவிதா.

"ச்சே!!! உன் செகண்ட் மீட்டிங்கும் இப்படியாகிடுச்சே" என்று வருத்தத்துடன் புலம்பினாள் ஐஸ்வர்யா.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடி. பவன் கிடைச்சதே போதும்டி" என்று கண்களிலிருந்து வடியும் கண்ணீரை துடைத்தவாறு கூறினாள் லஷ்மீகா.

"ஹே ரொம்ப திட்டிட்டானா?" என்று அவளை பாவமாய்  பார்த்தபடி கேட்டாள் இலியா.

ஆமா என்பது போல தலையை ஆட்டினாள்.

"ஓகே!!! இப்ப எதை நினைச்சும் பீல் பண்ணாத. பவன் கிடைச்சதை நினைச்சு சந்தோஷப்படு. நாளைக்கு கம்ப்ளேண்ட் கொடுக்கும் போது கூப்பிடு. உன் டாடி வரலன்னா நாங்க வர்றோம். இப்ப ஹாஸ்பிட்டல் போவோம். உண்மையிலே பவன் பயந்த மாதிரி தெரியுறான்" என்றாள் தீவிதா.

விஷாலாக்க்ஷா வந்ததும், அவள் வந்த வாகனத்தில் அனைவரும் வணிக வளாகத்தை அடைந்தார்கள்.

வாகனத்தில் இருந்து அனைவரும் இறங்கியதும், "சார் சொன்ன மாதிரி ஹேர்புல்லா இருங்க. எதுனாலும் கால் பண்ணுங்க" என்று அறிவுரை வழங்கிவிட்டு நகர்ந்தாள் விஷாலாக்க்ஷா.

வணிக வளாகத்தில் இருந்து அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

மருத்துவமணையில் பவனை பரிசோதனை செய்துவிட்டு, "பயப்படற மாதிரி ஒன்னுமில்ல. கொஞ்சம் பயந்திருக்கான். நல்லா தூங்கி எழுந்தா சரியா போயிடும். சாப்பிட வச்சிட்டு, இந்த டேப்லெட்ட கொடுங்க" என்று அறிவுரை கொடுத்தார் மருத்துவர்.

மருத்துவமணையில் பணத்தை கட்டி மாத்திரை வாங்கிவிட்டு, வாகனத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

"ஹே டைம்மாச்சு!!! நீங்களாம் வீட்டுக்கு கிளம்புங்கடி" என்றாள் லஷ்மீகா.

"இல்லடி வீடு வரைக்கும் உன்கூட நாங்க வர்றோம்" என்று ஐஸ்வர்யா சொல்லவும், இலியாவும் அதையே தான் கூறினாள்.

"நான் சேஃப்பா வீட்டுக்குப் போயிடுவேன். உங்க வீட்ல உங்களளாம் தேடப் போறாங்க நேரமாச்சு கிளம்புங்க.  ரொம்ப தேங்க்ஸ்டி" என்று நெஞ்சார கூறினாள் லஷ்மீகா.

"ஹே எதுக்குடி தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு"

"ஓகே சாரீ... வீட்டுக்குப் போனதும் மெசேஜ் பண்றேன்டி பை!!!" எனக் கூறிவிட்டு பவனை வாகனத்தினுள் அமர்த்துவிட்டு, மறுபக்கம் வந்து வாகனத்தை கிளப்பினாள் லஷ்மீகா.


***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *