வியாழன், 20 அக்டோபர், 2022

அவனுள்ளம் என் வசமாகுமோ! - அத்தியாயம் 13

 அத்தியாயம் : 13

மறுநாள் தர்ஷாவை தவிர, அனைவரும் எஸ்எஸ் வணிக வளாகத்தை அடைந்தார்கள்.


"தர்ஷா… என்ன பண்ணிட்டு இருக்காளோ? நம்மளை பத்திதான் நினைச்சிட்டு இருப்பா" என்று தீவிதா சொல்லவும், 


"நீ சொல்ற மாதிரி மாட்டுக்கார மாமன் பையன் வந்தா  அவனை விரட்டுறதை பத்தி யோசிச்சிட்டு இருப்பா தர்ஷா. அவ ரொம்ப போல்டான பொண்ணு" என்றாள் இலியா.


ஐஸ்வர்யாவோ, "ஆமா நீ இப்படியே காலத்துக்கும் மத்தவங்களை பார்த்து அதிசயப்பட்டுட்டே இரு. நீ ஒரு காலமும் ஒன்னும் பண்ணிடாத" என்று அவளை சடைத்தாள்.


"ஹே இலியாவை சொல்லி குத்தமில்லடி. அவளோட பேரன்ட்ஸ் அவளை இப்படி வளர்த்திருக்காங்க. அதுக்கு இவ என்ன செய்வா. இலியா ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர்.  நம்மளை மாதிரி கேள்வி கேட்கிற பொண்ணுங்களை விட இவளை மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுற பொண்ணை தான் ஜென்ஸ்க்கு பிடிக்கும். ஸோ… அஜய் ரியலி லக்கி. இலியாவை ரொம்ப லவ் பண்ணுவாங்க" என்றாள் லஷ்மீகா.


அவள் கூறியதை மறுப்பது போல தலையாட்டியவள், "இந்தக் காலத்துல சாஃப்ட் கேரக்டரா இருந்தா, ஏறி மிதிச்சிட்டு போயிடுவாங்கடி. இங்க பாரு இலியா... மேரேஜ் ஆனதும், கொஞ்சம் உன் ஆக்டிவிட்டிஸ்ஸை சேன்ஞ்ச் பண்ணிக்க. யாருக்கும் பயப்படாத. உன் ஹஸ்பண்டே ஆனாலும், தைரியமா எதிர்த்து நில்லு" என்று சொல்லிக் கொடுத்தாள் ஐஸ்வர்யா.


"சரிடி" என்று சிறு போல தலையாட்டினாள் இலியா.


"ஓகே... ஜாப் பத்தி உங்க வீட்லலாம் என்ன சொன்னாங்க?" என்று நினைவு வந்தவள் போலக் கேட்டாள் தீவிதா.


"விக்ரம்!!! என்ன வொர்க் போக வேணான்னு சொன்னான்டி. நான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன். அவனுக்காக நான் வேலைக்குப் போகக் கூடாதாம். என்கிட்டையே கன்டிஷன் போடுறான்" என்று கண்களை விழித்தாள் ஐஸ்வர்யா.


"என் டாடியும் அதைத்தான் சொன்னாங்க. நான் ஒரு வருஷமாவது வேலைக்கு போவேன்னு சொல்லிட்டேன்" என்றாள் லஷ்மீகா.


"எனக்கு அது பத்திலாம் தெரியாது, ஒழுங்கா எல்லோரும் ஜாப்க்கு வர்றிங்க. இல்லன்னா உங்க ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிடுவேன்" என்று அனைவரையும் மிரட்டுவது போலப் பார்த்தாள் தர்ஷா. 


"இலியாவை தவிற நாங்க எல்லாரும் வந்திருவோம்  யு டோண்ட் ஒர்ரி" எனக் கூறிவிட்டு தமயனை அழைத்துக் கொண்டு வணிக வளாகத்திற்குள் நுழைந்தாள் லஷ்மீகா. 


உடைகள், காலணிகள், அழகு சாதனபொருட்கள் என்று நால்வரும் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தார்கள்.


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வணிக வளாகத்தில் அதிகபடியான கூட்டம் வேறு இருந்தது. 


"டாங்கி!!! எனக்குக் கோர்ட் வேணும்" என்று லஷ்மீகாவின் கைப்பிடித்து அசைத்தான் பவன்.


"இரு டா எனக்கு எடுத்துட்டு உனக்கு எடுப்போம்"


"உனக்கு எத்தனை ட்ரெஸ் தான் எடுப்ப? போதும் உனக்கு எடுத்தது. வா என்னோட செக்ஷனுக்கு போவோம்" என்று அவளின் கைப்பிடித்து இழுத்தான். 


"டாங்கி!!! ரொம்ப பேசாத. அப்புறம் உனக்கு ஒன்னு கூட வாங்கித் தரமாட்டேன்" என்று வழக்கம் போல எதார்த்தமாக அதட்டினாள்.


பவனோ… அவளிடம் கோபித்துக் கொண்டு முகத்தை திருப்பி நின்றுக் கொண்டான். 


அவனது கோபத்தை கண்டுக்கொள்ளாது, மேற்கொண்டு தோழிகளிடம் பேசியபடி உடைகளை தேர்ந்தெடுப்பதில் தன் கவனத்தை செலுத்தினாள் லஷ்மீகா. 


ஒரு அரை மணி நேரம் கழித்து நினைவுவந்தவளாக, பவனை  திரும்பிப் பார்த்தாள்.  அவனைக் காணவில்லை.


"பவன்… பவன் பவன்" என்று அவனை காணாது அதிர்ச்சியுற்றாள் லஷ்மீகா.


அவளது அலறலில் அனைவரும் என்னவென்று கேட்டார்கள். 


"பவனை காணல?" என்றாள் அதிர்ச்சியாக… 


"ஹே எங்கடி போனான்?" என்று தீவிதா கேட்கவும், 


"இங்க தான்டி இருந்தான்" என்றாள் லஷ்மீகா. அவளின் கண்கள் கலங்கிவிட்டன.


"வாங்க ஆளுக்கொரு புறம் தேடுவோம்" என்று விரைந்து செயல்பட்டாள் ஐஸ்வர்யா.


அனைவரும் வணிக வளாகத்தில் ஆளுக்கொரு மாடியில் ஏறி இறங்கி, அவனைத் தேடிப் பார்த்துவிட்டு வந்தார்கள். பவனை காணவில்லை. 


"அய்யோ பவன் எங்க போனான்? பவன்" என்று பதட்டத்துடன் சுற்றி முற்றி பார்த்தவாறு கையை பிசைந்தாள் லஷ்மீகா.


"ஹே அழாதடி. முதல்ல அன்னைக்கு உன் ஆளு சொன்ன நம்பருக்குக் கால் பண்ணி பவனை காணலன்னு சொல்லு" என்று தக்க சமயத்தில் அறிவுரை கூறியவள், அவளது கை பையிலிருந்து செல்போனை எடுத்து அவளிடம் நீட்டினாள் ஐஸ்வர்யா.


உடனே அந்த நம்பருக்கு அழைத்து விஷயத்தைக் கூறினாள் லஷ்மீகா. 


"ஓகே மேடம் நீங்க மறுபடியும் அங்க கொஞ்சம் தேடிப் பாருங்க. சித்தார்த்தன் சார் உங்களை இமிடியட்டா கான்டாக்ட் பண்ணுவாங்க" என்றனர்.


மறுபடியும் அனைவரும் சென்று பவனைத் தேடினார்கள்.


சிறிது நேரத்தில் புதிதான எண்களிலிருந்து லஷ்மீகாவிற்கு அழைப்பு வந்தது. 


அந்த அழைப்பை பதட்டத்துடன் பார்த்தவாறு இருந்தாள்.


"கால் அட்டன் பண்ணு ஆபிஸரா இருக்கும்" என்று லஷ்மீகாவை அவசரப்படுத்தினாள் ஐஸ்வர்யா. 


சட்டென்று அழைப்பை ஏற்று செல்போனை காதிற்கு கொடுத்தவள், "ஹ… ஹலோ" என்றாள் தட்டுதடுமாறி. 


"ஐ எம் சித்தார்த்தன் ஐபிஎஸ். குழந்தையைக் காணோம்னு கால் பண்ணிருந்தீங்களா? ரைட் நெவ், நீங்க எங்க இருக்கீங்க?" என்று, தூப்பாக்கியில் இருந்து வரும் தோட்டா போன்று பட் பட்டென்று அவனது வார்த்தைகள் வெளிப்பட்டன.


அவன் தான் எனத் தெரிந்த பின்னர் கொஞ்சம் நிம்மதி அடைந்தவள், “சார்... நா... நான் எஸ்எஸ் ஷா... ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல சிக்ஸ்த் ப்ளோர்ல இருக்கேன்" என்றாள் லஷ்மீகா.


"க்ரவுண்ட் ப்ளோர் வாங்க"


அழைப்பு துண்டிக்கப்பட்டதும், தோழிகளுடன் வேகமாக கீழே விரைந்தாள்.


காக்கி உடையில் நெஞ்சை நிமிர்ந்துக் கொண்டு, பின்னால் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் சித்தார்த்தன். அவனுடன் நாலு பேர் உடன் நின்றிருந்தார்கள். அதில் விஷாலாக்ஷாவும் இருந்தாள்.


"சார், எப்படியாவது என் தம்பிய கண்டுப்பிடிச்சி கொடுங்க சார் ப்ளீஸ்..." என்று அவனிடம் கெஞ்சிக் கேட்பது போலக் கேட்டாள் லஷ்மீகா.


அவளைக் கூர்ந்து கவனித்தவன், "நீங்க ஸ்கூட்டி ஆக்சிடன்ட் பண்ண பொண்ணு தான? உங்க கூட வந்த பையனைத் தான் காணோமா?" என்று நினைவுவந்தவனாக கேட்டான் சித்தார்த்தன். 


"ஆமா சார்... நானும் அவனும் தான் வந்தோம். நாங்க பர்சேஸ் பண்ணிட்டு...." என்று, நடந்தவற்றை தவனை முறையில் அழுத படி கூறினாள்.


நடந்த விபரங்களை கேட்டு முடித்தவுடன் தாடையைத் தடவியபடி, "இப்படித்தான் ஹேர்லஸ்ஸா இருப்பீங்களா?” எனக் கேட்டான். 


அவனின் கேள்வியில் மேலும் அதிர்ச்சி அடைந்தாள் லஷ்மீகா. 


அவள் கையிலிருந்த கை பையை பார்த்தபடி, “இந்த ஹேண்ட் பேக்கை கைல வச்சுக்க தெரிஞ்ச உங்களுக்கு, அந்த சின்ன பையனை உங்க கண்ட்ரோல்ல வச்சிக்க முடியலையா ஆங்...? ஷாப்பிங் வந்துட்டா, ஏன் லேடிஸ்லாம் இப்படி மாறிடுறீங்க?" என்று திட்டினான்.


அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் லஷ்மீகாவின் இதயத்தை ரணமாய் கீறியது. வேறு யாரோ சொல்லியிருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது போல, கண்ணீருடன் தோழிகள் புறம் திரும்பினாள்.


அவளின் கைப்பிடித்து, "லஷ்மீ!!!  டோண்ட் பீல். முதல்ல பவனை கண்டுப்பிடிக்கணும்" என்று ஆறுதல் கூறினாள் ஐஸ்வர்யா.


"ஓகே… உங்க தம்பியா? அந்த பையன் போட்டோ... என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தான். இதை எல்லாம் 7899... இந்த நம்பருக்கு இமிடேட்டா செண்ட் பண்ணுங்க" என்றவன் விஷாலாக்ஷா பக்கம் திரும்பினான்.


"விஷா... நான் இங்க உள்ள சிசிடிவி கேமராவை பார்க்கிறேன். நீ கண்ட்ரோல் ரூமிற்கு பையனை பத்தி இன்பர்மேசன் கொடு. செக் போஸ்ட்ட அலாட் பண்ணு" என்று விரைந்தான்.


அவன் கூறிய எண்களுக்குத் தற்போது கடைக்குள் வைத்துத் தானும், பவனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பிவிட்டு, மனம் தாளாமல் வணிக வளாகத்தின் முன்னே இருந்த பிள்ளையார் சிலையின் அருகில் சென்று... கண்ணீருடன் பவன் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று வேண்டினாள் லஷ்மீகா. 


அவளுக்குப் பக்க பலமாக தோழிகள் உடன் சென்றனர்.


சிசிடிவி கேரமாவில் ஒருவன் பவனை அழைத்துச் செல்வதை கண்டுப்பிடித்து, உடனே அவனை போட்டோ எடுத்துக் கொண்டவன், வேகமாக நடுக்கூடத்திற்கு வந்தான் சித்தார்த்தன். 


பிள்ளையார் சிலை முன்பு நின்றிருந்த லஷ்மீகாவிடம், "உங்க தம்பிய இவன் தான் கூட்டிட்டுப் போயி இருக்கான். இவனை உங்களுக்குத் தெரியுமா?"  எனக் கேட்டபடி, தொலைப்பேசியை அவளிடம் காண்பித்தான்.


அதில் இருந்தவனை பார்த்துவிட்டு, "சார்... இவன் அன்னைக்கு நீங்க ஆட்டோ பிடிச்சு கொடுத்தீங்கள்ல, அவன் தான்" என்றாள் சிறிது தடுமாற்றத்துடன் லஷ்மீகா.


"எஸ்... அவனே தான். எனக்கும் நியாபகம் வந்திருச்சு" என்று ஏதோ யோசித்தான். 


அவர்களது அருகில் விஷாலாக்ஷா வந்தாள். 


அவளிடம் சில விஷயங்களை கூறியவன், "நீங்க இரண்டு பேரும் கூட வாங்க... நீங்க இரண்டு பேரும் இந்த மேடம் கூட போங்க. பையனை பத்தி இன்பர்மேசன் கிடைச்சா உடனே இன்பார்ம் பண்ணுங்க. 


எப்படியும் அந்த ஆட்டோகாரன் கொஞ்சதூரம் தான் போயிருக்க முடியும். இங்க இரண்டே இரண்டு வழி தான் இருக்கு. ஸோ, சீக்கிரம் போனா அவனைப் பிடிச்சிடலாம். நாங்க லெஃப்ட் சைடு போறோம்" எனக் கூறிவிட்டு வேகமாக நகர்ந்தான். 


அவன் பின்னால் ஐஸ்வர்யாவும், லஷ்மீகாவும் ஓடினார்கள். மற்றவர்கள் விஷாலாக்ஷாவின் பின்னே சென்றார்கள். 


சித்தார்த்தன் ஜூப்பை கிளப்பினான். விஷாலாக்ஷா வந்த வாகனத்தில் மற்றவர்கள் கிளம்பினார்கள். 


ஆளுக்கொளு பக்கம் பவனை தேடி சென்றார்கள். 


ஆட்டோ பற்றிய விபரங்கள் தொலைபேசியின் வாயிலாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து  சித்தார்த்தனுக்குத் தெரிவிக்கப்பட்டது. சித்தார்த்தன் செல்லும் வழியில் தான் அந்த ஆட்டோ சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 


அவனோ… விஷாலாக்க்ஷாவிற்கு அழைத்து தான் வந்த பாதையில் வரும்படி பணித்துவிட்டு, "அன்னைக்கு ஆட்டோல போகும் போது இன்னைக்கு ஷாப்பிங் போறோம்னு இரண்டு பேரும் பேசிக்கிட்டிங்களா?" என்று லஷ்மீகாவிடம் கேட்டான் சித்தார்த்தன்.


அழுத படி, ஆமா என்று தலையாட்டினாள். 


"அதான் பையனை தூக்கிட்டான்" என்றவன் கோபமாக... “நீங்களே ஆட்டோல போகும் போது அவனுக்குக் க்ளூ கொடுக்கிறது போல, யோசிக்காம எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க. அதனால பாதிக்கப்படுறது சின்னப் பசங்கதான். எத்தனை பேரை இந்த மாசம் கடத்தி, உயிரோட இருக்கும் போதே ஆர்கன்ஸ் திருடிருக்காங்க தெரியுமா?" என்று கத்தினான். 


அவனின் வார்த்தையில் ஆடிப் போனாள் லஷ்மீகா. ஐஸ்வர்யா கூட மனதிற்குள் அதிர்ந்துவிட்டாள். 


"பார்த்தா எஜூகேட்டட் மாதிரி இருக்கீங்க? எந்த விஷயத்தை எப்ப... எங்க பேசணும்னு தெரியாதா? அன்னைக்குக் கடத்தினா சந்தேகம் வரும்னு, இன்னைக்கு கடத்திருக்கான். அதுக்குத்தான் அன்னைக்கு உங்களை தனியா கூப்பிட்டு, கன்ட்ரோல் ரூம் நம்பரை பத்தி ரகசியமா சொன்னேன். நீங்க போன் போடும் போது கன்ட்ரோல் ரூம்ல இருந்து உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருப்பாங்களே" என்று சடைத்தான்.


அவனின் அத்தனை கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத தவித்தாள் லஷ்மீகா.


***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *