வியாழன், 20 அக்டோபர், 2022

என் வசமாகுமோ! - அத்தியாயம் 12

 அத்தியாயம் : 12


மறுநாள்… மின் தகனத்தில் ஒரு ஓரமாக கிடந்தான் அருள். 


எப்பொழுதும் ஒரு பத்து பதினைந்து பேரை வைத்து கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்தவன், தற்போது பார்க்க ஆளின்றி கிடந்தான். 


இறுதியாக மனைவி, குழந்தைகள் மட்டும் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 


அடுத்த சில மணி நேரத்தில்,  அருளின் சடலம் சாம்பலாக அருளின் மனைவி செல்வியிடம் கொடுக்கப்பட்டது.


"அய்யோ!!! எப்படி இர்ந்த மன்ஷன, இப்டி பவ்டரா கொடுத்துட்டான்களே! எம்புள்ளைகளுக்கு இனி ஆர் இர்க்கா?" என்று கத்தி கூப்பாடு போட்டாள்.


அருளின் குழந்தைகள் கண்ணீருடன் நின்றிருந்தனர்.


"சீக்கிரம் இடத்தைக் காலி பண்ண சொல்லுங்க" என்று அவர்கள் அருகில் நின்றிருந்த காவலர் ஒருவரை பணித்தாள் அங்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த விஷாலாக்ஷா.


"ஏம்மா!!! இங்கலாம் அழுதிட்டு இருக்காம, முதல்ல இடத்தைக் காலி பண்ணு" என்று செல்வியிடம் பணித்தான் காவலர். 


"யோவ்!!! என்னைய்யா எம் புருஷே செத்துட்டானு ஒங் வீரத்த என் கிட்ட காட்டுக்றீயா? எம் புருஷே ஒத்தையா நின்னுகன்னு ஒன்போது பேரோட கழுத்த அறுப்பான்யா. அவன இப்டி பவ்டரா கைல தந்துன்னு, அல்லாப்பேரும் குளிருவுட்டு அலையுறீங்களா? வருவான்யா என் தம்பி. அவ... அவ வந்துன்னு, உங்களோ கிழிப்பான்யா ஆங்..." என்று கத்திவிட்டு குழந்தைங்களை அழைத்துக் கொண்டு விரைந்தாள் செல்வி.


அவள் அகன்றதும், அங்குக் கூடியிந்த காவலர்களை கலையும் படி பணித்துவிட்டு, சித்தார்த்தனை  தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தாள் விஷாலாக்ஷா.


செல்வி புலம்பியதை கேட்டுவிட்டு, "ஓ... சாபமா?" என்றான் சித்தார்த்தன்.


"சிங்கம், அடுத்த மாசம் ஜெயிலில் இருந்து ரிலீஸாகுறான். அந்த தைரியத்துல தான் பேசறாங்க" 


"அவன் ரிலீஸானாத்தான? நேத்து மாதிரி கேஸை ஸ்ட்ராங் பண்ணிடுறேன்" 


"ஓகே சித்து யு கேரியான்" 


"பை விஷா!!!" எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க முயன்றான் சித்தார்த்தன். 


அவனிடம் தன் காதலை தெரிவிக்க எண்ணிய விஷாலாக்க்ஷா, "சித்து.... சித்து லைன்ல இருக்கீயா?" என்று அவசரகதியாக கத்தினாள். 


"யா... டெல் மீ"


"அ... அது வந்து சன்டே வெளிய போகணும்"


"ஓகே"


"ஆஃபிஸிலா இல்ல ஃபர்சனலா?" என்று தயங்கி தயங்கி கூறினாள். 


"ஃபர்சனலா????" என்று யோசனையாக கேட்டுவிட்டு, "சன்டே மார்னிங் கால் பண்ணு சொல்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் சித்தார்த்தன்.


'சித்து!!! கண்டிப்பா என் லவ்வை நீ ஏத்துக்கணும். நீ என் காதலை ஏத்துக்கலன்னா, நான்... உயிரோட  இருக்க மாட்டேன் சித்து. நீ எனக்கு வேணும்' என எண்ணிய படி வீட்டிற்கு விரைந்தாள் விஷாலாக்க்ஷா.


அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், "வாங்க மேடம் என்னைக்கு ஹேப்பீ ந்யூஸ் சொல்விங்க?" எனக் கேட்டாள் அவளது தமக்கையான நடாஷா. 


அவள் எதை கேட்கிறாள் என புரிந்துக் கொண்ட விஷாலாக்க்ஷா சன்னமான வெட்கத்துடன், "சன்டே சித்து கிட்ட என் லவ்வை சொல்ல போறேன்" என்றாள் சந்தோஷமாக... 


"சீக்கிரம் சொல்லித் தொலைடி. அக்கம் பக்கம்  கேள்வி கேட்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. என்ன உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையானு ஒரே கேள்விய கேட்டு, என் உயிரை வாங்குறாங்க" என்று சமையலறையில் இருந்து வெளி வந்த அவர்களின் அண்னை கிருஷ்ணவேணி புலம்பினாள். 


"அம்மா… இது என்ன சமைக்கிற விஷயமா ஈசியா செஞ்சு முடிக்க???" 


"இல்லன்னாலும் நீங்க ஒரு கேஸை சீக்கிரம் முடிச்சிருவிங்க?" என்று அவர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டவர் போல மகளை கேலி செய்தவாறு, மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தார் அவர்களின் தந்தை பாஸ்கரன். 


"இதுக்குத்தான் நான் வீட்டு பக்கமே வர்றதில்ல. ஹாஸ்டல்லையே இருந்திடுறேன்" என்று அனைவரும் தன்னை கேலி செய்வதை பொறுக்கமுடியாது எழுந்தாள் விஷாலாக்க்ஷா. 


அவளின் கைப்பிடித்து அமர வைத்து, "போதும்டி உனக்கு இந்த வேஷம். சீக்கிரம் சித்துவை கல்யாணம் பண்ணி, குழந்தைங்களை பெத்துட்டு ஒண்ணு வீட்டோட இரு. இல்லன்னா வேற எதாச்சும் வேலைய பாரு" என்று அறிவுரை வழங்கினாள் கிருஷ்ணவேணி. 


'சித்துவோட கல்யாணம் அவனை போல குழந்தைகள்' என்று மனதிற்குள் எண்ணிப் பார்த்து சந்தோஷம் அடைந்த விஷாலாக்க்ஷா, அன்னையின் முகம் பார்த்து சரி என்பது போலத்  தலையாட்டினாள். 


"இந்த தடவையாச்சும் சொதப்பாம சித்து கிட்ட உன் விருப்பத்தை சொல்லிடுவீயா? இல்ல அப்பா பேசவா?" எனக் கேலியாய் கேட்டார் பாஸ்கரன். 


"இ… இல்லப்பா நான் பர்ஸ்ட் பேசறேன். ஏன்னா சித்து இப்ப…. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான்" என்றாள் தயங்கியபடி… 


"ஏனாம்???"  என்று யோசனையாக கேட்டாள் நடாஷா. 


"மகாராஷ்டிரால இருக்கும் போது ஒரு ஆக்யூஸ்ட்ட சித்து என்கவுண்டர் பண்ணான். அந்த அக்யூஸ்ட்டோட  அண்ணன் மறுநாள் சித்துவோட அப்பாவை ஷூட் பண்ணிட்டான். அதுனால தான் ராஜா அங்கிள் இறந்தாங்க. ஸோ… மேரேஜ் பண்ணினா தன்னோட வொய்ஃப், குழந்தைக்கு எதாவது ப்ராப்ளம் வரும்னு  கல்யாணம் வேணானு சொல்றான்" என்றாள் விஷாலாக்க்ஷா. 


"முதல்ல இரண்டு பேரும் உங்க வேலைய விட்டுட்டு மேரேஜ் பண்ணுங்க. அடுத்து   ஜாப் பத்தி யோசிக்கலாம்" என்றாள் நடாஷா. 


"நான் இதலாம் யோசிக்காம இல்ல நட்டு. சித்து இந்த ஜாப்பை ரொம்ப லவ் பண்றான். அவன்கிட்ட எப்படி ஜாப்பை விட சொல்ல? இட்ஸ் நாட் பாசிபுல்" என்று தலை அசைத்தாள். 


"சித்து கிட்ட நாங்க பேசறோம். நாங்க பேசினா அவன் கேட்டுக்குவான்" என்று நம்பிக்கையாய் பாஸ்கர் சொல்லவும், 


"ஓகேப்பா… நான் சன்டே அவனை வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்" எனக் கூறிவிட்டு எழுந்தாள்  விஷாலாக்க்ஷா. 


தனது அறைக்குள் புகுந்து காக்கி உடையிலிருந்து வேறொரு உடைக்கு மாறியவள், மஞ்சத்தில் சரிந்து, கடந்த இரண்டு நாளாய் சித்தார்த்தனோடு பணியில் இருந்த தருணங்களை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தாள். 


லஷ்மீகாவோ… சித்தார்த்தனோடு முதல் சந்திப்பு இன்பமாக இல்லை என்று தோழிகளிடம் கூறிக் கொண்டிருந்தாள். 


"என்னடி சொல்ற?" அனைவரும் அதிர்ச்சியாகக் கேட்டனர்.


"ஆமாடி!!! முதல் சந்திப்பே இப்படியாகிடுச்சு. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அவன் கொடுத்த நம்பரும் அவனோடது கிடையாது. அது கன்ட்ரோல் ரூம் நம்பராம்" என்றாள் சிறிது வருத்தத்துடன் லஷ்மீகா. 


"நான் அன்னைக்கு சொன்ன மாதிரி, உன் லவ்க்கு உன் தம்பி தான்டி முதல் எதிரியா வந்து நிற்கப் போறான்" என்றாள் சற்று கோபமாக தீவிதா.


இல்லை என்பதாய் தலையை ஆட்டியபடி, "என்னோட முதல் பேபியே பவன் தான்டி. சின்ன வயசிலே, எனக்கு மதர்ங்கிற பொறுப்பக் கொடுத்தவன், நாங்க சண்ட போடுறதெல்லாம், ஐஸ்ட் ஒரு என்டர்டெய்ன்மென்ட்காகத் தான். அவனுக்கும் சித்தார்த்தனை பிடிச்சிருச்சுன்னா எனக்கு ஹெல்ப் பண்ணுவான். ஆனா எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக… அது வேணும் இது வேணும்னு கேட்பான். வாங்கி கொடுக்கலன்னா உன்னை டாடி கிட்ட போட்டு கொடுத்திருவேன்னு பிளாக்மெயில் பண்ணுவான்" என்று சொல்லிச் சிரித்தாள். 


"விடு லஷ்மீ!!! இனி ஒரு சான்ஸ் கிடைக்காமலா போகும் அப்ப… ஆபிஸரை கரக்ட் பண்ணிடு" என்று ஆறுதலாக கூறினாள் ஐஸ்வர்யா.


"உன் மேரேஜ் விஷயம் என்னாச்சுடி?" என்று நினைவு வந்தவளாக அவளிடம் கேட்டாள் லஷ்மீகா.


"அய்யோ!!! ரொம்ப பாஸ்ட்டா மேரேஜிற்கு ஏற்பாடு பண்றாங்கடி. அநேகமாக அடுத்த மன்த்தே மேரேஜ் வச்சிடுவாங்க போல. அதுக்கு மேல விக்ரம்… அப்பப்பா ரொமாண்டிக்கா மெசேஜ் பண்ணியே கொல்றான்"


"இலியா கூடச் சேர்ந்தவனா இருப்பான் போல" எனச் சொல்லி சிரித்தாள் லஷ்மீகா.


உடனே பேச்சை மாற்றிய இலியா, "ஹே லஷ்மீ!!! உன் ஆளு கிடைச்சதுக்கு, நீ எப்ப எங்களுக்கு ட்ரீட் தரப் போற?" எனக் கேட்டாள்.


"கண்டிப்பா பெரிய ட்ரீட் கொடுக்கறேன். தென்… நாளையோட நம்ம காலேஜ் லைஃப் முடியுது. ஸோ... பெரிசா செலிப்ரேட் பண்ணிடுவோம். ஈவினிங் எல்லாரும் எஸ்எஸ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு வந்திடுங்கடி" என்று அனைவரின் பார்வையை சந்தித்தாள் லஷ்மீகா.


தீவிதாவோ, "நாளைக்கு என்னால வர முடியாதுப்பா.  என் டாடியோட தங்கச்சியாம், யாரோ கிராமத்துல இருந்து வர்றாங்களாம். அதனால, டாடி என்னை வீட்டை விட்டு வெளிய வர அலோவ் பண்ணமாட்டாங்க. எனக்காக வேண்டி செலிப்ரேஷனை தள்ளிப் போடுங்கப்பா" எனக் கெஞ்சிக் கேட்டாள்.


"எனக்கு என்னவோ கிராமத்துல இருந்து வரப் போற அத்தை, கூடவே அவங்க பட்டிக்காட்டுப் பையனோட வந்து, வந்த இடத்துல உன்ன... உன் அழகான முகத்தை பார்த்ததுமே அவங்களுக்கு பிடிச்சு போய்... உடனே உங்க அப்பா கிட்ட கல்யாணத்தை பத்தி பேசிச் சம்மதம் வாங்கி, கல்யாணத்த இங்கேயே முடிச்சிட்டு.... கையோடு உன்னை அவங்க ஊருக்கு கூட்டுட்டு போய், அவங்க தொழுவத்துல உள்ள மாட்டுக்கெல்லாம் உன்னை தண்ணீ காட்ட வைக்க போறாங்கனு நினைக்கறேன்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தாள் தீவிதா.


அதனை கேட்டுவிட்டு கடுப்பான தர்ஷா, "என்னடி சொன்ன???" எனக் கேட்டபடி அவளை அடிக்க முனைந்தாள்.  


அவளிடம் அகப்படாமல் மைதானத்தில் ஓடினாள் தீவிதா. 


அவர்களைப் பார்த்து மற்றவர்கள் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.


சில நொடியில் தீவிதாவின் கழுத்தை  தன்னுடைய துப்பட்டாவால் இறுக்கிப் பிடித்தபடி, தோழிகளின் அருகில் வந்த தர்ஷா, "நான் தான்டி வர்றவங்களுக்கு தண்ணீ காட்டுவேன்டி" என்றாள் சத்தமாக… 


"வர்றவங்களுக்கு நீ தண்ணீ காட்டு இல்ல காட்டாம போ… அது பத்தி எங்களுக்கு கவலையில்ல. நாளைக்கு நாங்க ஷாப்பிங் போறோம். அடுத்த சன்டே உனக்காக மறுபடியும் ஷாப்பிங் போவோம் ஓகே வா???" என்று தர்ஷாவை சமாதானப்படுத்தினாள் லஷ்மீகா. 


அனைவரும் கல்லூரியை விட்டு பிரிய போகிறோம் என்ற வருத்ததில் ஒன்றாக நின்று விதவிதமாக வித விதமான இடத்தில் நின்று புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள். 


எப்பொழுதும் ஐந்து மணிக்கே வீட்டை பார்த்து விரைபவர்கள், அன்று ஆறு மணி வரை கல்லூரியில்  பொழுதை கழித்துவிட்டு, மனசில்லாமல் அவரவர் வீட்டை நோக்கி விரைந்தார்கள். 


அன்று தான் வர தாமதமாகும் என்று லஷ்மீகா கூறியதால், பவனை பள்ளியிலிருந்து  வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் சரத். 


வீட்டிற்குள் லஷ்மீகா நுழைந்ததும், அவள் கொண்டு வந்திருந்த பரிசு பொருட்களை பார்த்துவிட்டு, அவளிடம் அதை பறித்து பிரித்து பார்த்தான் பவன்.


தோழிகள் நால்வரும் ஆளுக்கொரு பரிசு பொருளை லஷ்மீகாவிற்கு கொடுத்திருந்தார்கள். அதே போல லஷ்மீகாவும் அனைவருக்கும் ஒரு பரிசு கொடுத்துவிட்டு வந்திருந்தாள். 


"ஒரு கிஃப்ட்டும் நல்லாயில்ல. இதுவே என் ப்ரெண்ட்ஸா இருந்திருந்தா விதவிதமா சாக்லெட், கேக்ஸ்னு கொடுத்திருப்பாங்க. உன் ப்ரெண்ட்ஸ் தத்தி" என்று லஷ்மீகாவை திட்டினான் பவன். 


"மங்கி கூட்டம் எப்பவும் திங்கறதுல தான இருக்கும். நீயும் உன் ப்ரெண்ட்ஸூம் சரியான மங்கி கூட்டம்!!!" என்று பவனை திட்டினாள் லஷ்மீகா. 


"நீங்களாம் டாங்கி கூட்டம். அதான் பாரு பேப்பரு, போட்டோனு உன் ப்ரெண்ட்ஸ் கொடுத்திருக்காங்க" 


இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, "ஆரம்பிச்சிட்டிங்களா???" என்று அதட்டினார் சரத். 


இருவரும் இருந்த இடத்தை விட்டு உடனே அகன்றார்கள்.


***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *