வெள்ளி, 11 மார்ச், 2022

"உழைக்க வயது தடையே இல்லை!" -சிறுகதை

 

"உழைக்க வயது தடையே இல்லை!" 



சென்னை மாநகரில் எப்போது வாகன நெரிசல் உருவாகம் என்று தெரியாத அளவிற்கு, உள்ளூர், வெளியூர் வாகனங்கள், வண்டிகள், ஆட்டோக்கள் வருகையால் நிறம்பி காணப்பட்டது. 


சூரியன் மறைந்து திரும்பி எழும் வரை ட்ராபிக்... ட்ராபிக்... ட்ராபிக் என்று, இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்பது போல வாகனங்கள் வரிசை வரிசையாக நின்றுக் கொண்டிருந்தது. 


பள்ளிக்கு, கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு என்று இவர்கள் தலைகள் தான் அந்த காலை நேர கூட்டத்திற்குள் அதிகமாக தெரிந்தன. 


அக்கரையில் இருந்து இக்கரைக்கு திரும்புவது போன்ற சலிப்பான பாவனையுடன், இடது கையில் ஒரு கூடையும், வலது கையில் ஒரு மஞ்ச பையையும், பயந்து பயந்து சாலையை கடந்து, எதிரே இருந்த ஃகாப்பீ ஷாப்பிற்கு நடந்து வந்தார் வயதான பாட்டி ஒருத்தி. 


அங்கே, தன் இடுப்பில் இருந்த கூடையை இறக்கி விட்டு, கூடையில் இருந்த தோசை மாவு பாக்கெட்டை... அந்த ஃகாப்பீ ஷாப்பில் உள்ள ஓனரிடம் எடுத்துக் கொடுத்தார் மூதாட்டி. பார்க்க எப்படியும் ஒரு ஆறுபத்திஎட்டு வயது நிரம்பியவர் போல் இருந்தார். 


அவரை கையில் இருந்த காப்பியை உறிஞ்சிய படி சிநேகன் என்பவன் பார்த்துக் கொண்டிருந்தான். 


கடைக்காரருக்கு வழக்கமாக கொடுக்கும் மாவு பாக்கெட்டுகளை கொடுத்துவிட்டு, "ஏப்பா இன்னும் இரண்டு தான் இருக்கு. இதையும் வாங்கிக்கிறீயா?" என்று ஒரு எதிர்பார்ப்புடன் கடைக்காரரிடம் கேட்டார் அந்த மூதாட்டி. 


அவரோ சிரிப்பான பார்வையுடன், "பாட்டி, நீ கொடுத்த பாக்கெட்டே சாயந்தரம் வரை, இங்கன கிடக்கும். இதுல எக்ஸ்ட்ரா வா வாங்க முடியாது பாட்டி" என்று கூறிவிட்டார் கடைக்காரர். 


யோசனையுடன் சிநேகனிடம் திரும்பி, "கண்ணு!!! இன்னும் இரண்டு மாவு பாக்கெட் இருக்கு, உன் வீட்டுக்கு வாங்கிக்கோயேன். நல்லா ரூசியா இருக்கும். இது கையிட்ட ஆட்டிய மாவுப்பா" என்று பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பாட்டி. 


ஒரு நிமிஷம் யோசித்தவன் "சரி... அதை கொடு பாட்டி" என்று தன்னிடமுள்ள ஐந்நூறு ரூபாயை மாவு பாக்கெட்டுக்கான பணமாக, பாட்டியிடம் நீட்டினான் சிநேகன். 


"ப்பா... என்ட சில்லறை இல்லப்பா" என்று ரூபாயை திருப்பிக் கொடுத்தார் பாட்டி. 


சட்டென்று யோசிக்காது, "பரவாயில்லை பாட்டி நீயே இந்த ஐந்நூறு ரூபாவ வச்சுக்க" என்று சிநேகன் சொல்லவும், 


"இல்லப்பா.... என்ன பாவம் பண்ணினேன்ன்னு தெரில. இந்த ஜென்மத்துல இப்டி கஷ்டபடுறேன். இதுல உங்ககிட்ட வேற நான் கடன் படனுமா?" என்றார் வருத்ததுடன்... 


"ஏன் பாட்டி இந்த வயசுல மாவாட்டி விக்கிறீயே? உனக்கு இதுல அப்படி எவ்வளவு ரூபா கிடைச்சிட போகுது. அதனால இந்த ரூபாவ வச்சுக்க பாட்டி" 


சிரித்துக் கொண்டே, "ஒரு பாக்கெட்டிற்கு 5 ரூபாய் கிடைக்கும்ப்பா" என்று அவர் சொல்லும் போதே! அவனுக்கு கஷ்டமாக இருந்தது. 


"சரி பாட்டி. இந்த ஆட்டோவில் ஏறு. நேரே... ******* இந்த அட்ரஸ் போய் இறங்கு. உனக்கு இந்த மாவு பாக்கெட்ட அங்க போய் விக்கலாம். உனக்கும் பிஸ்னஸ டெவலப் பண்ணின மாதிரி இருக்கும். இந்த பிடி ஐந்நூறு ரூபா. நான் உனக்கு உதவி பண்ணதா இருக்கட்டும்" என்று அறிவுரை கொடுத்தான் சிநேகன். 


அவனின் கூற்றில் சிறிது யோசித்த பாட்டி, "அதலாம் எதுக்குப்பா. இந்த மாவ கூட வச்சுக்கோ. காசெல்லாம் வேணா" என்று நடையை கட்ட முனைந்தார் பாட்டி. 


"ஏன் பாட்டி.  நான், உன்ன ஏமாத்திடுவேன்னு பாக்குறீயா? நீ வாழ்க்கையில ரொம்ப ஏமாந்து போனது போல இருக்க. அப்படியிருக்கிறப்ப உன்ன ஏமாத்தி எனக்கும் ஒன்னும் ஆக போறதில்ல" 


சற்று சிரித்தபடி, "நீ என்ன ஏமாத்துறதுக்கு என் கிட்ட பணமோ நகையோவா இருக்கு. நான் கொடுத்த மாவு பாக்கெட்டுக்கு ஐந்நூறு ரூபா கொடுத்திருக்க. நான் போய் உன்ன சந்தேகப்படுவேனா? 


சந்தேகப்படாம... என் உறவுகளுக்கு உழைச்சு போட்டேன். ஆனா... இருக்கிற காசை புடுங்கிகிட்டு கட்டுன புருஷனும், பெத்தபிள்ள எல்லாம் என்ன நடுத்தெருவுல விட்டுட்டாங்க. 


எஞ்சி இருக்கிறது இந்த உயிரு மட்டும் தான். என்ன செய்ய இந்த உயிர நாமலா போய்க்கிக்க முடியுமா? உடம்புல தொம்பிக்குற வர எதாவது வேல பாத்து, உயிர் உடலை விட்டு போகற சமயம் போய் சேர வேண்டியது தான்" என்று லேசாக கண்ணீர் சிந்தினார் பாட்டி. 


"நீ என்ன உன் உறவா நினைக்க வேணா பாட்டி. நம்பிக்கை இருந்தா இந்த ஆட்ரஸிற்கு போய் பாரு. இந்த ரூபாய ஆட்டோ செலவுக்கு வச்சுக்க பிடி" எனக் கூறிவிட்டு நகர்ந்தான். சமூக ஆர்வலர் சிநேகன். 


அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்த பாட்டி, சிறிது யோசித்துவிட்டு, சிநேகன் கொடுத்த விசிடிங் கார்ட்டை ஆட்டக்காரரிடம் கொடுத்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்தார். 


அந்த ஆட்ரஸ்க்கு சென்று பார்க்க... அது மகளிர் அமைப்பு என்று தெரிந்தது. 


"வாங்கம்மா..." என்று வரவேற்று அமரவைத்து, அந்த மூதாட்டியிடம் பேசினாள். அலுவலக பெண். 


"அம்மா... நான்..." என்று அந்த மூதாட்டி பேச ஆரம்பிக்க 


"எனக்கு எல்லாம் தெரியும் பாட்டி. உங்க கிட்ட ரூபாய் கொடுத்த தம்பி தான், இதை வச்சு நடத்துறார். ரோட்டுல இருப்பவங்க, ஆனாதை, உங்க மாதிரி வறுமையிலும் முதுமையிலும் கஷ்டபடுறவங்களுக்குகாக தான் இந்த மகளிர் அமைப்பை அவரு ஆரம்பிச்சிருக்காரு. நீங்க பயப்படாம தயங்காம இங்க தங்கிக்கலாம். இங்க இருக்கிறவங்கள உங்க உறவா நெனைச்சுக்கங்க" 


சிநேகனை பற்றி ஒரு கணம் மனதிற்குள் மகிழ்ந்த பாட்டி, "எனக்கு அடைக்கலம் வேணாம்மா. என் மாவு பாக்கெட்ட வாங்கிக்கிட்டா போதும். மொத்த பாக்கெட்டை இங்கையே வந்து கொடுத்திடுறேன்" என்று மூதாட்டி கிளம்பி எத்தனிக்க, 


காலம் போன கடையில் சாதிக்க வயது முக்கியமில்லை என உணர்த்திய மூதாட்டியை நினைத்து... அந்த அலுவலக பெண் பெரிதும் வியந்தாள். 'சார் சொன்ன மாதிரி தான் இந்த பாட்டி நடந்துக்கிறாங்க' என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, "சரி பாட்டி, நீங்க காலையிலே இங்க வந்து மாவு பாக்கெட்டை கொடுத்திட்டு, இங்கன இருந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க"என்று வற்புறுத்தினாள். 


சிரித்த முகமாக சரியென்று கிளம்பினார் பாட்டி. 


அவரின் சிரிப்பு கோடி ரூபாயை ஒரே இடத்தில் கொட்டி கொடுத்தாலும் காண கிடைக்காத பொக்கிஷம் போல, அலுவலக பெண்ணிற்கு தெரிந்தது. அவரை போல தள்ளாத வயதிலும், துணை இல்லாத நேரத்திலும், தைரியமாக பாட்டி செயல்படுவதையும், உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற அவரின் கொள்ளையையும் கண்டு, ஏதோ பிரச்சனை என்று தற்கொலை பண்ணிக் கொள்ளும் பெண்களுக்கு பாடமாக அமையட்டும். 


தங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி

சாய்லஷ்மி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *