வெள்ளி, 11 மார்ச், 2022

ஐ கேட் யூ... பட் ஐ லவ் யூ - சிறுகதை


ஐ கேட் யூ... பட் ஐ லவ் யூ

 




அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாவகாசமாக எழுந்து குளிர்த்துவிட்டு, கேஷுவல் ட்ரெஸில் சாப்பிட வந்தமர்ந்தான் மைக்கேல். 


அவனுக்கு சாப்பாடு பறிமாறியவள், "உனக்கென்ன ஆபிஸ்ல அந்த ராதிகா கூட பேச்சு. நான் பாக்கும் போது சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த? அப்படி என்ன தான் நீ சொன்னா... அவ சிரிச்சா? என்று, கணவனை சாப்பிடவிடாமல் வசைபாடிக் கொண்டிருந்தாள் ஜான்சி. 


'ஒரே ஆபிஸில்ல ரெண்டு பேரும் வேல பாக்கறதால... இந்த மாதிரி சண்ட வரும் போல' என்று  மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிமிர்ந்து அவளைப் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.  


அதில் கடுப்பான ஜான்சி, "நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தின்னுட்டு இருக்க. ஓ.... என் கூடலாம் உனக்கு பேச பிடிக்குமா? என் கூடலாம் சிரிச்சு சிரிச்சு உனக்கு பேச வருமா? இல்ல... என்ன சிரிக்க வைக்க தான் உன்னால முடியுமா? போ... அந்த ராதிகா கூடவே பேசு" என்று கண் கலங்க அதனை மறைந்தபடி அறைக்குள் புகுந்துக் கொண்டாள். 


அமைதியாக தட்டில் உள்ளதை சாப்பிட்டான் மைக்கேல். 


அறைக்குள் இருந்தவள், 'நான் மட்டும் பேசிட்டு இருக்கேன். அவன் பேசறானா பாரு?' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். 


சிறிது நேரத்தில், தான் சாப்பிட்டு முடித்த தட்டில் சிறிது பூரியும் குருமாவையும் வைத்து, மனைவியை காண அறைக்குள் நுழைந்தான். 


கணவனைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜான்சி. 


அவள் அருகில் அமர்ந்து, பூரியை கொஞ்சம் பிய்த்து, அவளது வாய் அருகே கொண்டு சென்றான். 


"எனக்கு ஒண்ணும் வேணா. ஐ கேட் யு" என்று கண்கள் கலங்கினாள். 


"ஹே லூசு" என்று செல்லமாக அழைத்தான். 


"ஆமா நான் லூசு தான்" என்று தலையாட்டினாள் ஜான்சி. 


"சரி ஒத்துகிட்டீள்ல சாப்பிடு" என்று சிரித்த படி கூறினான். 


"ஐ ஹேட் யு... என் முகத்துலையே முழிக்காத போ" என்று பிடிவாதம் பிடித்தாள். 


ஆனால் அவள் மீது கோபப்படாமல், "லூசு! அந்த பொண்ணு கிட்ட எதார்த்தமா சிரிச்சேன் டி அவ்வளவு தான்" என்று தோளை குலுக்கினான். 


"என் கிட்ட நீ ஏன் சிரிச்சு பேசல?" என்று விரல் நீட்டி, அவனிடம் கேள்வி கேட்டாள். 


"இது என்னடி அபத்தமான கேள்வி?" எனக் கேட்டான். 


"நான் பேசினா அபத்தமா இருக்கும். அவ பேசினா உனக்கு சிரிப்பு வரும். ஐ ஹேட் யு... ஐ  ஹேட் யு" என்று கத்தினாள். 


"ஐ லவ் யு டி..." என அவன் சொல்ல... 


"ஐ ஹேட் யு" அவள் கத்தவும்... 


'ஏன் என் மேல இப்படி கண் மூடித்தனமான அன்பை வச்சிருக்கா? யாராவது என் கிட்ட லைட்டா சிரிச்சு பேசினாலும் இவ்வளவு கோபப்படுகிறா?' என்று மனதிற்குள் எண்ணிய படி, சாப்பாட்டு தட்டை எதிரில் வைத்துவிட்டு, "எனக்கு பிடிச்ச உன் கிட்ட தானடி, இப்படிலாம் நெருங்கி உட்கார முடியும்" என்று அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான். 


"உன்ன மட்டும் தான்டி. இப்படி ஆசையா காத்து கூட புக முடியாதளவுக்கு கட்டிப் பிடிக்க முடியும்" என்று அதே போல... செய்தான். 


"உன்னை மட்டும் தானடி உடல் பேதம் வித்தியாசம் பாக்காம உரிமையா கொண்டாட முடியும். நீ தான் டி எனக்கு எல்லாமே!" என்று, அவளது கழுத்து வளைவில் இதழ் பதித்தான். 


ஆனாலும் கோபம் தனியாதவளாய், " ஐ ஹேட் யு" என்றாள் மீண்டும்... 


"ஐ லவ் யு...." எனச் சிரித்த படி கூறியவன், அவளது கன்னங்களை பிடித்து இதழில் முத்தமிட்டான் மைக்கேல்.


அமைதியாக இருந்தாள் ஜான்சி


அவள் யோசிக்கிறாள் என்று, "ஐ ஹேட் யு" என்றான் இந்த தடவை... 


"ஐ லவ் யு" என்றாள் ஜான்சி. 


மீண்டும் அவளது இதழில் முத்தமிட்டவன், "இனிமே இப்படி லூசு மாதிரி பேசுவீயா நடந்துக்குவீயா?" என்று அதட்டினான். 


ம்கூம் என்பது போல தலையாட்டினாள் ஜான்சி. அதில் நிம்மதியடைந்தவன். 


"உனக்கு பசிக்கலையா??" என்று அவளை அணைத்துக் கொண்டான். 


"பசிக்கிது" என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்தபடி... 


"நான் ஊட்டி விட்டா சாப்பிட்டுவ தானே?" என்று ஊட்டி விட ஆரம்பித்தான். 


"நல்லா சாப்பிடுவேன்" என்று தலையாட்டினாள். 


"நாம வேலை பாக்கறது ஒரே ஆபிஸ்ல டி. அங்கு இது போல ஏதாவது நடந்தா... நீ பொறுத்து போய் தான் ஆகனும். 


யார்கிட்டையும் நீ போய் என் ஹெஸ்பண்ட் கிட்ட சிரிச்சு பேசாதீங்கன்னு சொல்ல முடியாது. நானும்... என் பொண்டாட்டி கூட, பேசாதீங்கன்னு சொல்ல முடியாது. அதெல்லாம் ஜஸ்ட் அப்படியே விட்டினும். 


எனக்கு தெரியும் நான் எதுவரைக்கும் ஒரு பொண்ணு கூட பேசனும்னு. நீயும் மத்த ஆண்கள் எப்படி நடத்துக்கனும் உனக்கும் தெரியும். அப்பறம் ஏன் தேவையில்லாம இப்படி யோசிக்கற. வீட்ல தான்டி நான் உனக்கு புருஷன் வெளில நானும் நீயும் அங்க ஒன்னு தான்"என்று பக்குவமாக எடுத்து கூறினான். 


"எனக்கு புரியுது மைக்கேல். ஆனா சில நேரம் என்னையுமறியாம கோபப்பட்டுறேன். நான் வேணா வேற ஆபிஸ் மாற வா. உன் கிட்ட இப்படி சண்ட போட்டது எனக்கே பிடிக்கல" என்று எரிச்சலாக கூறினாள். 


"நீ வேற எங்கேயாவது ஒர்க் பண்ணினா, உன்ன பத்தின கவலை எனக்கு இருக்கும். நம்ம ஆபிஸ்லன்னா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன். இனி என்னை ஆபிஸ்ல ஒரு ஃஸ்டாப்பா பாருடி. உன் ஹஸ்பெண்ட்ட என்ன சைட் அடிக்காத. நானும் ராதிகாவும் சிரிச்சு சிரிச்சு பேசிறோம்னு யாராவது சொன்னாங்களா?"


"ஆமா பூஜா உன்ன கிண்டல் பண்ணி என் கிட்ட பேசினா? அதான் எனக்கு கோபம் வந்திடுச்சு"


நடந்த விபரங்களை தெரிந்துக் கொண்டதும், "அடுத்தவங்க சொல்றத மைண்ட்ல கொண்டு போகாத டி" என்றதும், தலையை ஆட்டினாள். 


சாப்பிட்டு முடித்ததும், "ஐ லவ் யு... பட் லிட்டில் பிட் ஐ ஹேட் யு" என்று அவளது தோலில் சாய்ந்தாள் ஜான்சி.


அதற்கு சிரித்துக் கொண்டே,"ஐ எம் ஆல் ஸோ... லிட்டில் பிட் ஹேட் யு டி" என்று சிரித்தான் மைக்கேல். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *